ஜோதிட ரீதியாக யார் கடன் வாங்க கூடாது ? கடனில் சிக்கி தவிப்பவர் யார் ?
எந்த லக்னக்காரர்கள் கடன் வாங்க கூடாது ?
ரிஷப லக்னம், மிதுன லக்னம், கன்னி லக்னம், துலாம் லக்னம், விருச்சக லக்னம், கும்ப லக்னம் |
- மேற்கண்ட லக்னக்காரர்கள் கடன் வாங்கி எந்த ஒரு செயலையும் செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் கடனின் காரணமாக மன உளைச்சல் ஏற்படும்.
கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் ஏற்படும்.
உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறாம் இடத்து அதிபதி வலிமையாக இருந்தாலும் நீங்களும் கடன் வாங்காதீர்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தாலும் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
உங்களுக்கு ஆறாம் இடத்து அதிபதியின் தசா புத்திகள் நடந்தாலும் கடன் வாங்கி எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. |
- உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதி ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சக ராசி, கும்ப ராசி ஆகிய ராசிகளில் இருந்தாலும் கடன் வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து கடன் வாங்குவது நல்லது. உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியுமா என அறிந்து கடன் வாங்குவது நல்லது.
நீங்கள் ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சக ராசி மற்றும் கும்ப ராசி ஆகிய ராசிகளில் பிறந்திருந்தாலும் கடன் வாங்குவதற்கு முன்பு யோசித்து கடன் வாங்குவது நல்லது.
முடிந்த வரையில் மேற்கண்ட ஜாதக அமைப்பினர் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் கடனை திருப்பி செலுத்தி விட்டு திரும்ப திரும்ப கடன் வாங்காமல் இருப்பது நல்லது.
கடன் தீர்க்கும் பரிகாரங்கள்:
தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவருக்கு தேங்காயில் மிளகு தீபம் போட்டு வழிபடுவது நல்லது.
- ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரு சமமாக உடைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணையை நிரப்பி கொள்ளுங்கள். அதில் மிளகை தூவிய பின்பு தீபம் போட்டு வழிபாடு செய்யுங்கள்.
மேற்கண்ட பரிகாரத்தை செய்யும்போது உங்களது கடனானது கட்டுக்குள் வரும்.
கடன் வாங்கும் மனநிலையை விட்டு விடுவது நல்லது. இது ஒரு வகையான வாழ்வியல் பரிகாரமாகும்.
நண்பர்களே, இந்தப் பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். நன்றி
இதையும் படிக்கலாமே
ஜாதக கட்டம் அல்லது ராசி கட்டம் எனப்படும் 12 வீடுகளுக்கான பலன்கள் | 12 Houses in Astrology in Tamil |